ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் அருகே ஜெலிடா என்ற பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் ரயிலின் சாரதி உயிரிழந்துள்ளார். பயணிகளில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
ரயில் சென்ற பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக சுவர் ஒன்று இடிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியே சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
இந்த தகவலறிந்து, 20 அம்யூலன்ஸ்கள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளன. தீயணைப்பு படை பிரிவின் 38 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். பாதுகாப்பு வளையம் அமைத்து, காயமடைந்த பயணிகளை மீட்டதுடன், ரயிலையும் சீர்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
