யாழ்ப்பாணம், கோவிலான் அருகே இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததற்காக ஏழு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட இச் சோதனை நடவடிக்கையில், இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களும் சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
