Our Feeds


Friday, January 2, 2026

Zameera

பல மில்லியன் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் இந்தியர் கைது!


 3 கிலோ 419 கிராம் 'குஷ்' (Kush) ரக போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர் என்பதோடு, அவர் நாட்டுக்குள் கடத்தி வந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 34.19 மில்லியன் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர் பெங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »