Our Feeds


Friday, January 2, 2026

Zameera

இந்த மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது


 இந்த மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று லிட்ரோ  நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

உலக சந்தையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எரிவாயு விலையில் அதிகரிப்பு அவசியம் என்றாலும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் எந்த திருத்தமும் செய்யப்படாது என்று அவர் கூறினார்.

12.5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,690 ஆகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,482 ஆகவும் உள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 694 ஆக உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »