Our Feeds


Sunday, January 18, 2026

Zameera

யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்


 யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலை சேர்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கெப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றுடன் ஒன்று மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 


இச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


பு. கஜிந்தன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »