அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதினுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையின்படி, இன்று (05) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.'
கடந்த அரசாங்க காலத்தில் விவசாய அமைச்சின் காரியாலயத்தை நடத்துவதற்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடமொன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அதன்படி, இச்சம்பவம் தொடர்பில் அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராகக் கடயூற்றிருந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய, அவர் இன்று காலை இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.
