பல கோரிக்கைகளை முன்வைத்து உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
புதிய திருத்தங்கள் உள்ளடங்கிய ரயில் நிலைய அதிபர் சேவையின் ஆட்சேர்ப்பு நடைமுறையின் 05 பிரதிகளை, அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரின் கையொப்பத்துக்காக சமர்ப்பிப்பதில் தாமதம் மற்றும் அந்த ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான இடைக்கால ஏற்பாடுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதில் தொடர்ந்து ஏற்படும் தாமதம் காரணமாக இந்த உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாகத் தெரிவித்துள்ளது.
குறித்த பிரச்சினைகள் தொடர்பில் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் இதுவரை அதற்கான தீர்வுகள் வழங்கப்படாமை காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
