Our Feeds


Saturday, January 3, 2026

Zameera

மண்முனைப்பற்று, ஆரயம்பதி மற்றும் பாலமுனை பிரதேச வீதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் எம்.பி ஆய்வு..!


 மண்முனைப்பற்று, ஆரயம்பதி மற்றும் பாலமுனை பிரதேச வீதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் எம்.பி ஆய்வு..!


மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனைப்பற்று, ஆரயம்பதி மற்றும் பாலமுனை பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஐ-ரோட்’ (I-Road) வேலைத்திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் வீதி அபிவிருத்தி பணிகளின் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், குறித்த அபிவிருத்தி பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்நிகழ்வின் போது, மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான நஸீம் மற்றும் ரபீக், இவ்வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் உட்பட,  முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


-- ஊடகப்பிரிவு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »