பரகல நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள பாடசாலையில்
தங்க வைக்கப்பட்டிருந்த 43 குடும்பங்கள் இன்று அந்த இடத்தை விட்டு வெளியேறி தங்களுக்கான இடங்களைத் தாங்களே தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25,000 வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடு அல்லது காணி தொடர்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. அவர்கள் யாருக்கும் தொடர்பில்லாதவர்கள் போல், வெறுமனே வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளனர்.
இதுவே எமது நாட்டின் டிட்வாவினால் (Ditwah) பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம்.
கடந்த மாதம் நான் அந்த இடத்திற்குச் சென்ற போது, இடிபாடுகளுக்குள் உடல்கள் இன்னும் புதைந்து கிடந்தன; தங்களின் அன்புக்குரியவர்களுக்கு கண்ணியமான இறுதி மரியாதை செய்ய குடும்பங்களுக்கு உதவுவதற்குக் கூட யாரும் முன்வரவில்லை. - சுவஸ்திகா அருளிங்கம்- அரசியல் செயற்பாட்டாளர்
