Our Feeds


Monday, January 12, 2026

SHAHNI RAMEES

வாகனப் பதிவு மற்றும் உரிமை மாற்றத்திற்கு 'TIN' இலக்கம் கட்டாயம்!

 


இலங்கையில் வாகனப் பதிவு மற்றும் வாகன உரிமை

மாற்றங்களின் போது வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது  ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது.


புதிய நடைமுறையின் முக்கிய விபரங்கள்:


விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள்: மோட்டார் சைக்கிள்கள், கை உழுயந்திரங்கள் (Hand Tractors), டிராக்டர்கள், டிராக்டர் டிரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வாகனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.


புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்துடன் 'TIN' இலக்கமும் உள்ளிடப்பட வேண்டும். வணிக நிறுவனமாக இருந்தால், நிறுவனப் பதிவு இலக்கத்துடன் 'TIN' இலக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


இந்த நடைமுறை முதன்முதலில் 2025 ஏப்ரல் 15 அன்று ஒரு சில சேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், மேம்படுத்தப்பட்ட தரவுத்தளத்தின் ஊடாக முழுமையான அமலாக்கம் இம் மாதம் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கும், நிதி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »