தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் நாட்டிற்கு 10,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தரம் குறைந்த நிலக்கரிகேள்விப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்குப் போதுமான ஏற்பாடுகள் இருந்தபோதிலும், அதனை இரத்து செய்யாமை பாரதூரமான விடயமாகும்.
ஒப்பந்தத்தின்படி இரண்டு நிலக்கரி கப்பல்கள் வராவிட்டால் அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் ஒரு கப்பலும், ஜனவரியில் நான்கு கப்பல்களும் மட்டுமே வந்துள்ளன.
பெப்ரவரி மாதத்தில் இதுவரை நான்கு கப்பல்களே வந்துள்ளன.
மொத்தம் 15 கப்பல்கள் வந்திருக்க வேண்டிய நிலையில் இதுவரை 8 கப்பல்களே வந்துள்ளன.
இந்தக் கப்பல் தாமதத்தினால் மட்டும் நாட்டிற்கு 31 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
தரம் குறைந்த நிலக்கரி கேள்வி பத்திரத்தால் இதுவரை 7,500 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இது 10,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என டி.வி. சானக்க தெரிவித்தார்.
