தற்போது நடைபெற்று வரும் ஐசிசி (ICC) ஆண்கள் டி20 உலகக்
கோப்பையில், இந்தியாவிற்கு எதிரான முக்கியமான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவு, சர்வதேச கிரிக்கெட்டில் புவிசார் அரசியலின் (Geopolitics) தாக்கத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.இதேபோன்ற ஒரு சம்பவம் 1979-ஆம் ஆண்டிலும் நடந்தது. அப்போது ஐசிசி டிராபி (ICC Trophy) தகுதிச் சுற்றுப் போட்டியின் போது, இஸ்ரேலுக்கு எதிரான போட்டியில் விளையாட இலங்கை மறுத்தது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாலஸ்தீன விவகாரத்திற்கான ஆதரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அந்தப் போட்டியில் விளையாடாமல் இஸ்ரேல் வெற்றி பெற்றதாக (Walkover) அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இலங்கை அந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று ஐசிசி டிராபியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து 1979 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி ஒரு வரலாற்றுச் சாதனையையும் படைத்தது.
Orginal post - eng - azzam ameen FB
