Our Feeds


Thursday, February 12, 2026

Zameera

நீர் விபத்துக்களால் இவ்வருடம் 24 பேர் உயிரிழப்பு


 இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நீரில் மூழ்கி ஏற்பட்ட விபத்துக்களினால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இவ்வாறான அனர்த்தங்கள் அதிகளவில் இடம்பெறும் இடங்களை மையப்படுத்தி விசேட உயிர்பாதுகாப்பு  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், "F.U. வூட்லர்" தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீர்நிலைகளுக்குச் செல்லும்போது மிகவும் அவதானமாக இருக்குமாறும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »