நாமலின் வருகைக்கும் ரிஸ்வி முப்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்முல்லாஹி வபரகாதுஹ்
08-02-2026 ஆம் தேதி எமது கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து விளக்கம்
08-02-2026 அன்று எமது கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா தொடர்பாக, சமூக ஊடகங்களில் சிலர் பிழையான தகவல்களைப் பரப்பி வருவதை அவதானிக்கிறோம். இந்நிகழ்ச்சி முழுமையாக எமது கல்லூரி நிர்வாகத்தின் ஏற்பாடு மற்றும் பொறுப்பின் கீழ் நடத்தப்பட்டது.
மேற்படி நிகழ்விற்கு எமது அழைப்பின் பேரில் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ தலைவர், பொருளாளர் மற்றும் சில நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
குறித்த நிகழ்விற்கு எமது அழைப்பின் பேரில் பலர் கலந்து கொண்டிருந்ததுடன், குறிப்பாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். மத்ரஸாக்கள் தொடர்பான விடயங்களில் சிங்கள மொழி மூலம் விரிவான விளக்கங்களை வழங்குவதே நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்ததன் பிரதான நோக்கமாக இருந்தது.
மேற்படி நிகழ்வை ஏற்பாடு செய்வதிலும், நடத்துவதிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ தலைவர் அவர்களுக்கோ அல்லது அதன் நிர்வாகத்திற்கோ எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை மரியாதையுடன் தெளிவுபடுத்திக்கொள்கிறோம்.
செயலாளர்,
(ஒப்பம்)
SECRETARY
Ash-Sheikh Umair Jiffry
(Imany, B.A.Cey)
Imaniyya Arabic College,
No.66/13, Broomhill Estate,
Thihariya, Sri Lanka.

