Our Feeds


Tuesday, February 10, 2026

SHAHNI RAMEES

நாட்டை வந்தடைந்தது ஓமானின் கடற்படை கப்பல்!

 


ஓமானின் ரோயல் கடற்படைக்குச் சொந்தமான 'சாத்' 

என்ற கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை (10) நாட்டை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


நாட்டுக்கு வருகை தந்த கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.


75 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பலுக்கு லெப்டினன்ட் கமாண்டர் ஷாஹீன் சவுத் அப்துல் ரஹ்மான் ஏ.ஐ. பலுஷி தலைமை தாங்குகிறார்.



கப்பல் வருகை இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான தொழில்முறை தொடர்பு மற்றும் நல்லெண்ண பரிமாற்றங்களை எளிதாக்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.


கப்பல் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் பணியாளர்கள் கொழும்பு நகரில் உள்ள பல சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »