Our Feeds


Saturday, February 14, 2026

Zameera

விஷம் குடித்தால் என்னவாகும்? என பரிசோதனையில் ஈடுபட்ட ஐந்து பேரில் , நால்வர் பரிதாபமாக உயிரிழப்பு


 


“விஷம் குடித்தால் என்னவாகும்?” என்ற விபரீதப் பரிசோதனையில் ஈடுபட்ட சிறுமிகள் ஐவரில், நால்வர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிர் பிழைத்த 14 வயது சிறுமியின் வாக்குமூலத்தின்படி, ஐந்து நண்பர்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று கொக்குகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் விஷத்தை உட்கொண்டுள்ளனர்.


“விஷம் குடித்தால் மரணிப்போமா அல்லது பிழைப்போமா என்று பார்ப்போம் என என் தோழி கூறினாள். அனைவரும் தண்ணீருடன் விஷத்தைக் கலந்து குடித்தனர். நான் மிகக் குறைந்த அளவே உட்கொண்டுவிட்டு, உடனடியாகத் துப்பிவிட்டேன். அதனால் உயிர் பிழைத்தேன்” என அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்.


கண்ணெதிரே தனது நான்கு நண்பர்களும் நிலைகுலைந்து வீழ்ந்து உயிரிழப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, வீட்டிற்கு ஓடிச் சென்றுள்ளார்.

அவரது குடும்பத்தினர் உடனடியாக வேப்பிலைச் சாற்றைக் கொடுத்து வாந்தி எடுக்கச் செய்ததால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.


Source:- NDTV

 

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »