Our Feeds


Sunday, February 22, 2026

Zameera

நுவரெலியா நகரம் பாதுகாப்பாக உள்ளது


 நுவரெலியா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். 


நிலவும் சீரற்ற வானிலை மத்தியிலும், நகரத்தை அண்மித்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு நிலைமை எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 


சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 


எவ்வாறாயினும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட உள்ளிட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


அப் பகுதிகளில் உள்ள மக்களைத் தெளிவுபடுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அவசர அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள அனைத்துப் பிரிவினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »