பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தான் ஒரு பௌத்தர் என்பதையும், பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதம் அல்ல.
இந்த நாட்டில் பெரும்பான்மையாக பௌத்த மக்கள் வாழ்கிறார்கள்
நாங்கள் சிங்கள பௌத்தர்கள்.
அதனால் பௌத்த தர்மத்திற்காகவும், பௌத்த கலாசாரத்திற்காகவும் குரல் கொடுப்பது தவறு அல்ல.
அதே நேரத்தில், இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும், அனைத்து கலாசாரங்களையும் பாதுகாக்க நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்.
இந்த நாடு பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நாடாக இருந்தாலும், அதுவே அனைத்து மதங்களுக்கும் பாதுகாப்பளிக்கும் திறன் கொண்டது.
அதனால் தனக்கு எந்த பயமும் இல்லை என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
