Our Feeds


Monday, February 2, 2026

Zameera

ஐஸ் போதைப்பொருடன் இருவர் கைது


புத்தளம் - மெல்லன்குளம் பகுதியில் மேற்கொள்ளபட்ட சோதனை நடவடிக்கையின்போது, 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 524 கிராம் ஐஸ் போதைப்பொருடன் நேற்று (01) இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய தம்பதியினர் இப்பாகமுவ பகுதியில் உள்ள தமது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


கிடைக்கபெற்ற இரகசிய தகவலினடிப்படையில், சுமார் ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட இரகசிய கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, போதைப்பொருளைக் கடத்திச் சென்றபோதே குறித்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »