Our Feeds


Tuesday, February 10, 2026

Zameera

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் "ஹிஸ்புல்லாஹ் நூலகம்" மற்றும் "KMS ஸ்மார்ட் வகுப்பறை" திறந்து வைப்பு.!

 

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியின் ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் KMS ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம் நூரி அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (8) சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு, நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.


நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியுடன் இணைந்து, தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழித் திறன் உள்ளிட்ட நவீன அறிவுத் துறைகளிலும் பயிற்சிகளை வழங்குவது காலத்தின் அவசியமாகும் எனக் குறிப்பிட்டார்.


மேலும், இங்கு திறந்து வைக்கப்பட்ட "ஹிஸ்புல்லாஹ் நூலகம்" பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தந்தையின் பெயரில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


-- ஊடகப்பிரிவு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »