Our Feeds


Tuesday, March 10, 2026

SHAHNI RAMEES

இன்று(10) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!!!

 

இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 3990 ரூபாவாகும்.

 

அதேபோல், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 1602 ரூபாவாகும்.

 

மேலும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 750 ரூபாவாகும்.


Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »