வழி இலக்கம் 143 ஹங்வெல்ல - கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடுவெல - கொழும்பு பேருந்து ஊழியர்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக எழுந்த பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அந்த பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
புணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஹங்வெல்ல - கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்களை மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜெயசிங்க, பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
