ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 250 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 600 கல்வி நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் கல்வி அமைச்சின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மையத்தின் தலைவர் ஹொசைன் சாதகி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் 184 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாகத் அவர் தெரிவித்தார்.
தெஹ்ரானில் மட்டும் 16 மாணவர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எட்டு மாணவர்கள் மற்றும் ஐந்து கல்வியாளர்கள் காயமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
பெப்ரவரி 28 முதல் சுமார் 200 நிர்வாக, கலாச்சார மற்றும் கல்வி வசதிகள் சேதமடைந்துள்ளதாக சாதகி தெரிவித்துள்ளார்.
