இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 692,744 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் அதிகளவானோர் இந்தியப் பிரஜைகளாவர்,
அந்த எண்ணிக்கை 135,070 ஆகும்.
பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
