முறையில் கொள்கலன்களில் 800 லீற்றர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், அங்கு கடமையாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், கொள்கலன்களில் நிரப்பப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 லீற்றர் டீசலைக் கண்டுபிடித்து மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக அங்கு கடமையாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-
