Our Feeds


Saturday, March 28, 2026

Zameera

போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தானில் நாளை முதல் பேச்சுவார்த்தை

ஒரு மாத காலமாக நீடிக்கும் ஈரான் போர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் பாகிஸ்தானில் நாளை (29) முதல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அதன்படி, இந்தப் பேச்சுவார்த்தைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் (30) ஆகிய இரு தினங்கள் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளன.

 

இந்த இருநாள் பேச்சுவார்த்தைகளின் போது, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து நான்கு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துரையாடுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மோதல்களைக் குறைப்பதற்கான ஒரு பொறிமுறையை இந்தச் சந்திப்பின் மூலம் நிறுவ முயற்சிப்பதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் தெரிவித்துள்ளார்.



 

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »