அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், பொதுமக்கள் வரிசைகளில் நின்று தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
டீசல்: 33 நாட்களுக்குப் போதுமான கையிருப்பு உள்ளது.
பெட்ரோல்: தற்போது 27 நாட்களுக்குப் போதுமான கையிருப்பு உள்ளது.
எதிர்கால வரவு: எதிர்வரும் (07) மற்றும் (08) ஆம் திகதிகளில் 35,000 மெட்ரிக் தொன் பெற்ரோல் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.
இதன் மூலம் பெற்ரோல் கையிருப்பு 40 நாட்கள் வரை அதிகரிக்கும்.
விமான எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் விமான எரிபொருள் (Jet A-1): 49 நாட்களுக்குப் போதுமான கையிருப்பு உள்ளது.
கச்சா எண்ணெய்: சுத்திகரிப்பு நிலையத்தை தடையின்றி இயக்குவதற்கு 44 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதுடன், ஒரு கப்பல் தற்போது நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இலங்கையின் களஞ்சியப்படுத்தும் வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதால், கப்பல்கள் வரும் கால அட்டவணைக்கு ஏற்ப பழைய கையிருப்புகளை காலி செய்து, புதிய கையிருப்புகளை நிரப்பும் பணி விஞ்ஞான ரீதியாக முன்னெடுக்கப்படுகிறது.
தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய கிழக்கு போர் விரிவடைந்தால் அது உலகளாவிய பிரச்சினையாக மாறக்கூடும்.
இருப்பினும், தற்போதைய நிலையில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி உறுதியளித்தார்.
