முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோர், உள்ளூர் டெண்டர்களை தன்னிச்சையான முறையில் கையாண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்த சட்டமா அதிபர் திணைக்களம், போதிய சான்றுகளின் அடிப்படையில் இருவருக்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
