பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகளுக்குஇ அவை
பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் வாரத்திற்கு 60 லீற்றர் முதல் 360 லீற்றர் வரையிலான எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்துள்ளார்.போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய முறைமை முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, தனியார் பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சாலைகள் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்துச் சேவைகள் தடையின்றி இடம்பெறுவதை உறுதி செய்யவும்இ பேருந்துகளின் தூரத்திற்கேற்ப எரிபொருளை நீதியாகப் பகிர்ந்தளிக்கவும் இந்த புதிய முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் குறைத்துஇ பொதுப் போக்குவரத்தை சீராகப் பேண இந்த எரிபொருள் ஒதுக்கீடு முறை பெரிதும் உதவியாக இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்துள்ளார்.
