ஈரான் மீதான போருக்கு அமெரிக்க நட்பு நாடுகள் உதவாவிட்டால், நேட்டோ 'மிக மோசமான எதிர்காலத்தை' எதிர்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
ரஷ்யாவுடனான போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு உதவியதால், ஹார்முஸ் ஜலசந்தி மூடலுக்கு ஐரோப்பா உதவும் என்று எதிர்பார்ப்பதாக டிரம்ப் கூறினார்,
ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் டிரம்ப்,
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைத்திருக்க அரபு நாடுகள் இந்த யுத்தத்தில் இணைய வேண்டும். இந்த ஜலசந்தியிலிருந்து எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. எனவே வாஷிங்டன் மட்டும் சுமையைத் தாங்கக்கூடாது எல்லா நாடுகளும் இணைந்து இந்த சுமையை சுமக்க வேண்டும்.
40 ஆண்டுகளாக நாங்கள் அரபு நாடுகளை பாதுகாத்து வருகிறோம், நீங்கள் இதில் ஈடுபட விரும்பவில்லை. இது முறையல்ல என்கிறார் ட்ரம்ப்.
ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பது தொடர்பாக ஏழு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய டிரம்ப்.
வாஷிங்டன் ஈரானுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஆனால் மோதலை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரான் தீவிர பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக உள்ளதா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தனது நிர்வாகம் ஈரானுடன் பேசி வருகிறது. ஆனால் அவர்கள் தயாராக இல்லை என்று நான் நினைக்கிறேன்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதல்களில் ஹோர்மூஸ் ஜலசந்தியை பாதுகாக்கும் சண்டையில் இணையுமாறு அமெரிக்க அதிபர் விடுத்த கோரிக்கையை அரபு நாடுகளும், நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளும் மறுத்து விட்டன.
