பொதுவில் தோன்றிய ஈரானிய தலைவர்கள் - அமெரிக்க
ராணுவ தளபதிக்கு பதிலடிஈரான் தலைநகர் தெஹ்ரானில், பாலஸ்தீன விடுதலை வேண்டி ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வரும் அல்-குட்ஸ் தின பேரணியில் அணிவகுத்துச் செல்லும் மக்களுடன் ஈரானிய உயர் அதிகாரிகளில் பலர் பங்கெடுத்து மக்களுடன் மக்களாக தைரியத்தை வரவழைக்கும் பேச்சுக்களை பேசினார்கள்.
📌ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்
📌உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி
📌வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கி
📌உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கோலம்-ஹொசைன்
ஆகியோர் இந்த பாரிய யுத்த நிலையிலும் பொதுவில் தோன்றிய அதே நேரம், பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லாஹ் அலி முஜ்தபா நிகழ்வில் பங்கேற்க்க விலலை.
ஈரானிய தலைவர்கள் பங்கரில் ஒழிந்துகொண்டார்கள் என அமெரிக்க ராணுவ தளபதி சொல்லியிருந்த நிலையில் நேரடியாக களத்திற்கு வந்து தமது தைரியத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியிருக்கிறது ஈரானிய தலைமை.
