குறித்த ஸ்கேன் இயந்திரம் கடந்த 3 ஆம் திகதி முதல் செயலிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்களில் காயமடைந்தவர்கள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்ட நோயாளர்களுக்காக பிரதானமாக ஒதுக்கப்பட்டிருந்த இந்த இயந்திரம் செயலிழந்துள்ளமையால் அவசர நோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்யவேண்டிய நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 25க்கும் மேற்பட்ட எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது இவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
தேசிய வைத்தியசாலையில் மேலதிகமாக இரண்டு எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ள போதிலும், இந்த இயந்திரத்தின் செயலிழப்பால் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே பரிசோதனைகளுக்காக நேரத்தை ஒதுக்கியிருந்த நோயாளர்கள் இதனால் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
தனியார் வைத்தியசாலைகளில் எம்.ஆர்.ஐ பரிசோதனை ஒன்றை மேற்கொள்வதற்கு 30,000 ரூபாய் முதல் 120,000 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
