அமெரிக்காவுக்கு சொந்தமான இரண்டாவது F-35 ரக
அதிநவீன போர் விமானம் ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர இராணுவம் அறிவித்துள்ளது.ஈரான் புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய ‘பார்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மத்திய ஈரான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.செய்தி அறிவிப்புகள்
இந்த சம்பவத்தில், குறித்த போர் விமானம் முழுமையாக சேதமடைந்து நொறுங்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், விமானத்தில் இருந்த விமானி குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. விமானம் வீழ்ந்த விதத்தையும் வெடித்த தன்மையையும் கருத்தில் கொண்டால், விமானி பாதுகாப்பாக வெளியேறியிருக்க வாய்ப்பு குறைவு என ஈரானிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
