இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 147 வெளிநாட்டவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இன்று சிலாபம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சிலாபம், இரணவில பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து இணையவழி மூலம் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் 133 சீனப் பிரஜைகளும், 13 வியட்நாம் பிரஜைகளும், ஒரு மலேசியப் பிரஜையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
