Our Feeds


Friday, April 3, 2026

Zameera

24 மணி நேர நீர் வெட்டு 18 மணி நேரமாகக் குறைப்பு


 பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த 24 மணித்தியால நீர்வெட்டு, 18 மணித்தியாலங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

எனினும் முன்னதாகத் திட்டமிடப்பட்ட திகதிகள் மற்றும் பகுதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »