Our Feeds


Saturday, April 25, 2026

Zameera

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8.4 இலட்சத்தை தாண்டியது


 ( இணையத்தள செய்திப் பிரிவு )


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 840,000 க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

026 ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 840,411ஆக காணப்படுகிறது.


அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்தே வந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 176,465ஆக பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.


அதேநேரம், ஏப்ரல் மாதம் முதலாம்; திகதி முதல் 22ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 99,777 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாளாந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »