Our Feeds


Saturday, April 25, 2026

Zameera

தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்


 தாய்லாந்து - பெங்கொக்கிலிருந்து இலங்கைக்கு உலர்ந்த பழப் பைக்கற்றுகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கொழும்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தனது பயணப் பொதியில் இருந்த உலர்ந்த பழப் பைக்கற்றுக்களைப் பிரித்து, அதற்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, மிகவும் நுணுக்கமான முறையில் போதைப்பொருளைப் பொதி செய்து மறைத்து வைத்திருந்தார்.

சோதனையின் போது அவரிடமிருந்து 2,505 கிராம் 'குஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இதன் சந்தைப் பெறுமதி சுமார் 25,050,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »