Our Feeds


Thursday, April 2, 2026

Zameera

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது!


போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். 


வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்களும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். 


அவர்களிடம் இருந்து 1500ற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது. 


கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


-வவுனியா தீபன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »