அடுத்த நான்கு ஆண்டுகாலத்திற்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (25) நடைபெற்ற அக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தலிலேயே அவர் இப்பதவிக்குத் தெரிவாகியுள்ளார்.
இம்முறை தலைவர் பதவிக்காக 5 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களில் இலங்கை கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் உப தலைவர் சிரந்த பீரிஸ் மற்றும் இலங்கை பேஸ்பால் கூட்டமைப்பின் தலைவர் அஸங்க செனவிரத்ன ஆகியோர் பிரதான வேட்பாளர்களாகக் களமிறங்கியிருந்தனர்.
இதன்போது நடைபெற்ற தேர்தலில் 16 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அஸங்க செனவிரத்ன, அடுத்த 4 ஆண்டுகளுக்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ளார்.
அடுத்த நான்கு ஆண்டுகாலத்திற்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (25) நடைபெற்ற அந்தக்குழுவின் உத்தியோகபூர்வ பொதுத்தேர்தலிலேயே அவர் இப்பதவிக்குத் தெரிவாகியுள்ளார்.
இம்முறை தலைவர் பதவிக்காக 5 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் இலங்கை கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் உப தலைவர் சிரந்த பீரிஸ் மற்றும் இலங்கை பேஸ்பால் (Baseball) கூட்டமைப்பின் தலைவர் அஸங்க செனவிரத்ன ஆகியோர் பிரதான வேட்பாளர்களாகக் களமிறங்கியிருந்தனர்.
இதன்போது நடைபெற்ற தேர்தலில் 16 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அஸங்க செனவிரத்ன, அடுத்த 4 ஆண்டுகளுக்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ளார்.