Our Feeds


Monday, April 6, 2026

SHAHNI RAMEES

எதிர்க்கட்சித் தலைவராக நாமல் ராஜபக்ஷ!


 எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான பொறுப்பை

நாமல் ராஜபக்ஷ சிறந்த முறையில் செயற்படுத்துகிறார். மக்களும் அவரை எதிர்க்கட்சித் தலைவராகவே பார்க்கிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்தார்.


அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையை குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மீது ஒட்டுமொத்த சுமையையும் திணிக்க அரசாங்கம் முயற்சிக்க கூடாது. நெருக்கடி நிலைமையை கையாளும் திறன் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும்.


கொவிட் பெருந்தொற்று காலத்தில் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளான போது மக்கள் விடுதலை முன்னணி அந்த நெருக்கடியை தனது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தியது. தமது ஆதரவாளர்களை வீதிக்கிறக்கி போராட்டங்களை தோற்றுவித்தது.


மேலும் கண்டறிக

ஈழத்தமிழர் செய்திகள்

Beaches & Islands

மங்கையர் சிறப்பு பதிப்பு

நெருக்கடியான நிலைமையில் அரசாங்கங்களை பலவீனப்படுத்தும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களில் செயற்பட்டதை போன்று நாங்கள் செயற்படபோவதில்லை.  மக்களை வீதிக்கு இறக்கவுமில்லை. எதிர்க்கட்சிகளை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.


எரிபொருள் தட்டுப்பாடு வரும் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட போது அரசாங்கம் அதை பொருட்படுத்தவில்லை. தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் மின்னுற்பத்தி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளத.


தரமற்ற நிலக்கரி கொள்வனவு செய்யப்படவில்லை.நட்டம் ஏற்படவில்லை என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் குறித்த நிலக்கரி உற்பத்தியால் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.Geographic Reference



எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பல விடயங்களை வெளிப்படுத்தவுள்ளோம். ஊழல் மோசடிகளுக்கு யார் துணை செல்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்துக்கொள்ள முடியும்.


எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான பொறுப்பை நாமல் ராஜபக்ஷ சிறந்த முறையில் செயற்படுத்துகிறார்.மக்களும் அவரை எதிர்;க்கட்சித் தலைவராகவே பார்க்கிறார்கள். மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படுகிறார். ராஜபக்ஷர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை  மக்கள் விளங்கிக்கொண்டுள்ளார்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »