ஹோர்முஸ் நீரிணையில் இரண்டாவது கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு மேற்கே எட்டு மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் மீதே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அது தற்போது கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் துப்பாக்கிச் சூட்டினால் கப்பல் பணியாளர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் பாதுகாப்பாக கணக்கில் எடுக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் தொடங்கியதிலிருந்து, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து ஈரானால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க இராணுவம் ஈரானிய துறைமுகங்களுக்கு முற்றுகையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
