Our Feeds


Friday, April 24, 2026

Zameera

குவைட் விமான சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குவைட் விமான சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக குவைட் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு இணங்க, குவைட்டின் தேசிய விமான சேவையான குவைட் எயார்வேஸ் மற்றும் தனியார் விமான சேவையான ஜசீரா எயார்வேஸ் ஆகியன தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவுள்ளன.

பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குவைட் அரசாங்க தகவல் தொடர்பு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைட் சர்வதேச விமான நிலையம் முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »