Our Feeds


Friday, April 17, 2026

Zameera

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை


 (இணையத்தள செய்தி பிரிவு) 

நாட்டின் தெற்கு மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை (17) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, தெற்கு மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »