ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது
பாகர் காலிபாப் கூறும்போது, ஈரானின் விமானப்படை மற்றும் ஏவுகணை திறன்களை பலவீனப்படுத்துதல், கடற்படையை அழித்தல், தரைவழித் தாக்குதலைத் தொடங்குதல், ஹோர்முஸ் ஜலசந்தியை திறத்தல் உள்ளிட்ட தனது பல இலக்குகளில் அமெரிக்கா தோல்வியடைந்துள்ளது. இந்த இலக்குகளில் எதையும் அமெரிக்கா அடையவில்லை. எச்சரிக்கைகளை விடுப்பதன் மூலமும், காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலமும் அமெரிக்கா தனது இலக்குகளை அடையவில்லை என்பதால் இடைத்தரகர்கள் மூலம் செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளது.எங்கள் எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதற்காக எதிரிகள் ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரவும், ஈரானை 'வெனிசுவேலா போன்ற நிலைக்கு தள்ளவும் முயன்றனர், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது என்றார்
