Our Feeds

Friday, April 17, 2026

SHAHNI RAMEES

நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை - அமைச்சர் விஜித ஹேரத்

நிலக்கரி இறக்குமதியின் போது எவ்வித ஊழலும் நடைபெறவில்லை

என்றும், எனினும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்த மட்டத்தில் இருந்ததை ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில், அமைச்சர்கள் பலரின் பங்கேற்புடன் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நிலக்கரி கொள்வனவு குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், நிலக்கரி தொடர்பான ஊழல்கள் குறித்து எவரேனும் தகவல் அறிந்திருந்தால் அதனை வழங்க முடியும் என்றும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

நிலக்கரி இறக்குமதியின் போது எவ்வித ஊழலும் நடைபெறவில்லை என்றும், எனினும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்த மட்டத்தில் இருந்ததை ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில், அமைச்சர்கள் பலரின் பங்கேற்புடன் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நிலக்கரி கொள்வனவு குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், நிலக்கரி தொடர்பான ஊழல்கள் குறித்து எவரேனும் தகவல் அறிந்திருந்தால் அதனை வழங்க முடியும் என்றும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »