Our Feeds


Saturday, April 25, 2026

Zameera

தந்தையை கொலை செய்த மகன் கைது


 கூரிய ஆயுதத்தால் தனது தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் அதிரஹபிட்டிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதிலேயே இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளதாக ஆம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய மகனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »