ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதவான், சந்தேகநபரான கபில சந்திரசேனவை ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
