Our Feeds


Saturday, May 23, 2026

Zameera

இரத்தினபுரியில் கிராமம் ஒன்றில் மண்சரிவு அபாயம்; 12 குடும்பங்கள் வெளியேற்றம்


 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லேல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் உதாகலகம பகுதியில் மண்சரிவு ஒன்று மீண்டும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதன் காரணமாக, குறித்த பகுதியிலிருந்து 12 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலுவலகம் தெரிவித்துள்ளது. 


கடந்த 2025 ஆம் ஆண்டில் இந்த மண்சரிவு முதன்முதலாக அடையாளம் காணப்பட்டதுடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட களப் பரிசோதனையின் பின்னர், இப்பகுதி மண்சரவு ஏற்படக்கூடிய அதிக ஆபத்துள்ள இடமாக அடையாளம் காணப்பட்டது. 


இதற்கமைய, நேற்று (22) காலை 6:30 மணியளவில் இந்த மண்சரிவு மீண்டும் ஏற்படுவதற்கான அறிகுறிகளை அடுத்து, அந்த இடத்திற்கு அருகில் வசித்து வந்த குடும்பங்கள் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »