Our Feeds


Thursday, May 14, 2026

Zameera

சீரற்ற காலநிலையால் 3,475 பேர் கடுமையாக பாதிப்பு


 (எம்.மனோசித்ரா)


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. 


அத்துடன் 489 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 நபர்கள் 8 தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இன்று (14) காலை 10 மணி நிலைவரத்துக்கமைய 88 வீடுகளும் ஒரு வணிக நிறுவனமும் பகுதியளவு சேதமடைந்துள்ளன என குறித்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »