வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள
நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும், இந்த விபத்தில் சிக்கி மேலும் 9 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிவாயு வெடிப்பு சம்பவித்த தருணத்தில், 247 தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்ததாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
